செவ்வாய், 30 ஜூன், 2009

சங்கம் காலம் - அகம்



" முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே ".


பாடியவர்: கூடாலுர் கிழார்






பொருள்:-

தயிரை பிசைந்த, மலரைவிட மெல்லியவிரல்களைத் தான்அணிந்திருக்கும் உடையிலேயே துடைத்துக்கொண்டும், அழகான கண்களில்அறுப்பு புகை எல்லாம் புகுந்தும் கண்களை கசக்கிக் கொண்டே தான்கிண்டிய புளிக்குழம்பை, ரசித்து சாப்பிடும் கணவன்நன்றாக இருக்கிறதுஎன்றவுடன் அடுப்படியில்தான் பட்ட சிரமம் எல்லாம்மறந்து மலர்ந்தது மகிழ்ச்சியடைகிறது அவள் முகம்..





சனி, 27 ஜூன், 2009

தூரம்


உன்னை விட்டு
தொலைந்து விடத்தான்
பார்கிறேன் !



தொலைவில் நீதான்
நின்று
கூப்பிடுகிறாய் !

வியாழன், 25 ஜூன், 2009

மெளனமாய் சில

















மெளனமாய்

சிரிந்து

அழுது

சொல்ல முடியாத

மெளனத்தின்

வலிகள்

எத்தனையோ!














உணர்ந்து சொன்னாய்

துடைக்கும் விரலாய்

இல்லாமல்

குத்தும் விரலாய்

ஆனேனோ!

















சொல்லெ துடிக்கும்

இதயத்திற்கு

உயிர் இருந்தது

கேட்ட

இதயம்

உயிர் அற்றதோ!













வருடங்கள்

கழித்தன

பேச்சு

மட்டுமா

ஆம்

உனக்கு!
















பால்யத்தில்

பருவத்தில்

கல்லூரியில்

கிடைக்காத

அனைத்தும்

கிடைத்தது

உன்னில்

உனக்குத் தெரியாமல்!


















எத்தனையோ

நண்பர்கள்

இருவருக்கும்

உனக்கு

புள்ளியாய்

எனக்கு

உலகமாய்!
















நெஞ்சு நிரம்பி

வழிந்தது

ஒன்றும் இல்லாமலெ

ஒரு வேளை

இருந்தால்

அதிர்ச்சியில்

இறந்து தான்

போயிருக்கும்!














கடக்கும் நொடிகளும்

கடக்கும் நினைவுகளும்

நெஞ்சை விட்டு

கடப்பதில்லை!













எத்தனையோ

நினைவுகள்

வரிசையாக்கினால்

வாழ்நாள்

இத்து தான்

போகும்

உன் நினைவுகளும்

அப்படியே!