
அழகான காலையில்
உன்னுடன்
யாருமற்ற தனிமையில்
சில கணங்கள்
சில்லிடத்தான்
செய்தது!
சிற்சில சொற்கள்
சில்லரையாய் சிந்தினாலும்
சிதறாத
நேசம்
சில நிமிடங்களில்
உணர முடிந்தது!

நேசத்தின் வெளிப்பாடாய்
ஒரு நிமிடம்
உறைந்தது
இதயம்!

அந்த கணங்கள்
சில ஜென்மங்கள்
போதும் !